Wednesday, April 15, 2009

ஹிந்து மதத்தின் எதிரிகள்

ஹிந்துக்களின் எதிரிகள் என்கிற தலைப்பில் ஆர்க்குட் தமிழ் குழுமத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன..அதில் நான் பதிவு செய்தவைகளை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன்.

ஹிந்து மதத்தின் எதிரிகளில் முக்கியமானவர்கள் பெரும்பன்மை இந்துக்களை தங்கள் மதம் மீதே வெறுப்பு கொள்ளச்செய்தவர்கள்...அவர்கள் அந்தகாலத்தில் கல்விமானாக இருந்தவர்கள்... வேதம் என்கிற ஒரு அறிவியலை தனக்குள் மட்டும் வைத்துக்கொண்டு யாருக்கும் போதிக்காமல் இப்பொழுது அது அழியும் நிலைக்கு கொண்டுவந்தவர்கள்... வான சாஸ்திரம், கணித சாஸ்திரம் போன்றவை வேதத்திற்குபின் வந்த ஆராய்ச்சி நூலகள்...சமிஸ்கிருதத்தில் விமான சாஸ்திரம் என்று ஒரு புத்தகம் உண்டு...அதில் ஒரு உலோகத்தை பறக்க வைப்பது எப்படி என்று விளக்கமாக உள்ளது. விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கு பலகாலம் முன்பு எழுதப்பட்டது....இன்றைக்கு அது எம்.ஏ படிக்கும் சமிஸ்கிருத மாணவர்களின் பாடமாக உள்ளது...ஆனால் அதில் என்ன பயன்? ..மக்கள் நேரடியாக ஏரோநாட்டிகல் எஞினியெரிங் படித்துக்கொள்கிறார்கள்.. தீண்டாமையை புகுத்தியவர்கள்...அதையே இன்றைக்கு எதிரிகளாக சொல்லப்படும் வேறு மதநிறுவனங்களும் மதசார்பற்ற அரசியல்வாதிகளும் போலி நாத்திகர்களும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.. சக மனிதன்ன் மீது அன்பு செலுத்தாதவர்களும் தனக்கு தெரிந்த கல்வியை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாத சுயநலவாதிகளும்தான் முக்கிய காரணம்..

இன்னும் சொல்லலாம்... கோவிலுக்குள் அதுவும் வெளிச்சம் புகாத கருவறைக்குள் இருக்கும் கடவுளின் உருவத்தை காட்ட தீபம் ஏற்றினார்கள். ஆனால் அந்த தீபத்தை தட்டில் ஏந்தி வந்து தட்சணை கேட்பதென்பது ஒருவித சுயநலம்.அந்த தீபத்தை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும் என்பது ஏமாற்று வேலை. இதற்கெல்லாம் அடிப்படை காரணம் அர்ச்சகர்களின் பேராசை என்று சொல்வார்கள். ஆனால் இன்னொரு காரணம் ஏழ்மை நிலையும்தான். இன்றும் நீங்கள் தஞ்சை, கும்பகோணம், காரைக்க்கால், நாகப்பட்டிணம் வேதாரண்யம் பகுதிகளில் ( குறிப்பாக சோழநாடு) சுற்றிவந்தால் பல கோயில்களை காணலாம். பெரும்பாலான மக்களுக்கு தஞ்சை பெரிய கோயிலும் கும்பகோணமென்றால் திருநாகேஸ்வரமும் ஒப்பியப்பன் கோயிலும் தான் தெரியும். ஆனால் கிட்டத்தட்ட 100 -க்கும் மேற்பட்ட கோயிலகள் வரை அந்த் பகுதிகளில் இருக்கின்றன. எல்லா கோயிலகளும் மிக உயரமான கோபுரங்களை உடையதாகவும், மிகப்பெரிய பரப்பளவில் உள்ளதாகவும் இருக்கின்றன. சோழ , நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டவை. சிற்பக்க்லைக்கு சான்றாக விளங்குபவை. பரம்பரையாக வரும் அர்ச்சகர்களெ அங்கு பூஜை செய்து வருகிறார்கள். கோவிலுக்கென்று இருக்கும் நிலங்கள் இப்பொழுது பறிபோய்விட்டன. இந்த நிலையில் அர்ச்சகர்கள் அந்த கோயில்களை தினமும் சுத்தம் செய்து பூமாலை வாங்கி போடக்கூட வசதியில்லாதவர்களாக உள்ளனர். அவர்களிடம் விளக்கேற்றக்கூட காசு இல்லை. இந்நிலை தங்கள் குழந்தைகளுக்கும் வந்துவிடக்கூடாதென்று சென்ற தலைமுறையிலேயே பல அர்ச்சகர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட துவங்கி விட்டார்கள். இந்த தலைமுறையில் எல்லோரும் வேறு வேலைக்கு சென்றுவிட்டார்கள். கோயில் பக்கம் எட்ட்டிப்பார்ப்பதில்லை...ஐயருக்கே அக்கறைஇல்லை என மற்றவர்களும் ஒதுங்கிக்கொண்டார்கள். இப்பொழுது அங்கிருக்கும் கோயில்கள் எல்லாம் சுத்தம் செய்ய ஆளின்றி சிதிலமடைந்து இருக்கின்றன . இன்னும் சில வருடங்களில் அதனருகே செல்லும் யாராவது தும்மினால் அந்த அதிர்சியிலேயே விழுந்துவிடும். இதற்கெல்லாம் காரணம் வேற்று மத சக்திகளோ நாத்திகவாதிகளோ இல்லை.ஹிந்துக்கள்தான். மீண்டும் என் முதல் பத்திக்கே வருகிறேன்... இதற்கும் நான் முதல் பதிவிற்கும் ஒரு நூலிழை தொடர்பு உண்டு. கோயில்கள் நன்றாக இருந்த காலத்தில் கிடைத்த தான தர்மங்ங்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே வைத்துக்கொண்டு கல்வியையும் பிற சாதியினருக்கு கற்றுக்கொடுக்காமல் எல்லா சுகங்களயும் அனுபவித்தவர்கள் இனி கஷ்டம் என்றபோது என்ன சொல்லி பிறரிடம் கேட்பது?

ராமானுஜரும் பாரதியாரும் தாங்கள் வாழ்ந்த கால்த்திலேயே இதுபற்றி யோசித்திருக்கிறார்கள். ராமானுஜரின் வழியை அவரின் சீடர்களே பின்பற்றவில்லை. பாரதியின் நிலை நமக்கு தெரிந்ததே. ராமானுஜரை எதிர்த்தவர்கள் சைவ சித்தாந்தவாதிகள், பாரதியை எதிர்த்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்பது வெளியே தெரிபவை. ஆனால் பிராமணர்கள் மத்தியிலேயே இவர்கள் இருவருக்கும் எதிர்ப்புகள் இருந்தன. இதற்கு காரணம் ஒருவித மிதப்பு அல்லது தற்பெருமையிலேயே சிக்கிக்கொண்டவர்களாக பிராமணர்கள் அன்று இருந்திருக்கிறார்கள். இன்று சிதம்பரம் வரை அதேநிலைதான். வேதங்கள் பயின்றால் நினைவாற்றலை பெருக்க்கிக்கொள்ளலாம் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மனப்பாடம் செய்து ஒப்பித்தல் / எழுதுதல் மற்றும் கணிதம் போன்ற பாடங்கள் எளிதாக இருக்கும். இது வெறும் இந்து மத வேதங்கள் மட்டும்தான் என்றில்லை. அனைத்து மதங்களுக்கும் பொருந்தும். தியானம்அல்லது சந்தியாவந்தனம், பிரேயர், நமாஸ் எல்லாமே மனதையும் உடலையும் பலமானதாக்குபவை. மூடநம்பிக்கைகள் அல்ல...அறிவியல்பூர்வமானவை..இந்தியாவில் இருக்கும் மற்ற மதத்தினரில் அனைவருக்கும் கட்டாயமாக கிடைக்கும் இந்த ஆன்மீக அனுபவங்கள் இந்து மதத்தில் மட்டும் பலருக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம்..??

இன்று கூட கோயிலகளில் நடைபெறும் அர்ச்சனை தவிர்த்த தினப்படி வேலைக்ள் எல்லாம் பெரும்ப்ப்லும் பிராமணரல்லாதோர் செய்கிறார்கள். வேதம் கற்பதில் மட்டும் ஏன் விதிவிலக்கு? இனியாவது சில வேதபாடசாலைகள் தங்களை திருத்திக்கொள்ளவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்...( எதிர்பார்ப்பு மட்டுமே இப்பொழுதைக்கு என்னால் முடியும்)..அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டம் பலமாக நடைமுறைபடுத்தப்பட ஆர்.எஸ்.எஸ் விஹெச்பி போன்ற அமைப்புகள் துடிப்புடன் செயல்படுமா?




6 comments:

  1. //கோயில்கள் நன்றாக இருந்த காலத்தில் கிடைத்த தான தர்மங்ங்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே வைத்துக்கொண்டு கல்வியையும் பிற சாதியினருக்கு கற்றுக்கொடுக்காமல் எல்லா சுகங்களயும் அனுபவித்தவர்கள் இனி கஷ்டம் என்றபோது என்ன சொல்லி பிறரிடம் கேட்பது?//

    முழுக்கட்டுரையுமே பொறுமையுடன், பொருளுடன் எழுதி இருக்கிறீர்கள், பாராட்டுகள்.

    //அர்ச்சனை தவிர்த்த தினப்படி வேலைக்ள் எல்லாம் பெரும்ப்ப்லும் பிராமணரல்லாதோர் செய்கிறார்கள். வேதம் கற்பதில் மட்டும் ஏன் விதிவிலக்கு?//

    இதில் முரண்படுகிறேன், தமிழர்கள் பன்னிரு திருமுறைகளையும் வழிபாட்டுக்குக்கு கற்றுக் கொண்டால் போதுமானது

    ReplyDelete
  2. கோவி.கண்ணன்

    வருகைக்கும் தங்கள் கருத்துக்களுக்கும் நன்றி

    லட்சுமணன் வேலவன்

    நன்றி.உங்கள் எதிர்வினைகளையும் பதியலாமே..

    ஆர்க்குட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது அபிமானம் கொண்டவர்கள் எதிர்வினை இட்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சாதியை கடுமையாக எதிர்க்கிறது என்றும் சொல்லி பல சுட்டிகளையும் இணைத்திருக்கிறார்கள்.
    அது உண்மையாக நேர்மையாக இருந்தால் மகிழ்ச்சியே...

    ReplyDelete
  3. பொறுமையாக உங்கள் கருத்தை வலியுறுத்தி உள்ளீர்கள்.இந்து மதம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை கொண்டது, ஆனால் அதனுள்ளே இருக்கும் சிலரை ஏற்றுக்கொள்ளாது. வேதமோ அதிலிருக்கும் அறிவியலோ,கணிதமோ அனைவருக்கும் சென்றடைய ஆத்திகர்கள் முழுமையாக இறங்கவேண்டும்.

    ReplyDelete
  4. ஆர்க்குட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது அபிமானம் கொண்டவர்கள் எதிர்வினை இட்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சாதியை கடுமையாக எதிர்க்கிறது என்றும் சொல்லி பல சுட்டிகளையும் இணைத்திருக்கிறார்கள்.
    அது உண்மையாக நேர்மையாக இருந்தால் மகிழ்ச்சியே...//

    அதை செயலில் காட்டவேண்டுமே.எனக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சேர்ந்த யாரையும் தெரியாது, உண்மையெனில் கோவ்லில் தாழ்த்தப்பட்டவர்கள் கருவறை நுழைவு போராட்டங்களை நடத்த வேண்டியவர்கள் இவர்களே.இதை ஒரு நாத்திகன் நடத்தினால் எதிர்ப்பு வரும் ஆனால் இந்து மதக் காவலர் என்று கருதுபவர்கள் நடத்தலாம்.

    please word verification

    ReplyDelete