Saturday, March 5, 2022

குதிரைவால் - திரைப்படம்

 நண்பர் அகரமுதல்வன் அவர்கள் ஒருங்கிணைத்த நிகழ்வான, "குதிரைவால்" திரைப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு சென்றிருந்தேன். 

இலக்கியத்தில் வணிக எழுத்து, தீவிர இலக்கியம் என இருவகை உண்டு. இதில் தீவிர இலக்கியமானாலும் கதையோட்டம் புரியும். ஆனால் மற்றொன்று பின்நவீனத்துவம் அல்லது  மாயயதார்த்தம் வகை. இவ்வகைப் படைப்புகளை விளங்கிக் கொள்வது கடினம். தொடர் வாசிப்பும் உரையாடலும் தேவைப்படும். இங்கு  வெகுஜன திரைப்படத்தில் அத்தகைய ஒன்று கடினமானது. ஆனால் அதை ஒரு திரைப்படத்தில் சாதித்து உள்ளனர்.




குதிரைவால் படம் ஒரு லத்தீன் அமெரிக்க நாவல் போல இருந்தது. அதைவைத்து தமிழில் எழுதப்படும் ரமேஷ் பிரேதன் பா.வெங்கடேசன் கதைகள் போல சில உரையாடல்கள் இருந்தன.  ஆரம்பத்தில் மிகவும் செயற்கையான  ஒன்றாக இருந்தது. சலிப்பும் தோன்றியது. சில இடங்களில் அந்த பொருந்தாமையால் சிரிப்பும் வந்தது. ஆனால் இரண்டாம் பாதி படத்தை இணைத்து விட்டது. அதில் வரும் டிடெக்டிவ் உருவம் , நாயகனுக்கு வரும் கனவு, குதிரை வால் போன்றவை  சுவாரசியமானவை.  ஏற்கனவே சினிமா / தொடர்கள் வழி  பரிச்சய முகமான  நடிகர் சேத்தன்  இதில் கனவு /  நனவு என இரண்டிலும் வருவதை வைத்தும் சிலவற்றை யூகிக்க முடிந்தது. மற்ற சிலரும்  அவ்வாறு வந்தாலும் அவர்கள் புதுமுகங்கள் என்பதால் முதலில் பிடிபடவில்லை. 

ஆனால் வெறும் திரை ரசிகனாக சந்திரமுகி படத்தில் வரும் பாம்பு குறியீடு புரியாத காலம் ஒன்று எனக்கு  இருந்தது. இன்று  இந்த போர்ஹேஸ் பிரம்மராஜன் குறியீடுகள் எல்லாம் புரிவது மகிழ்ச்சியே :-)

ரசிகனுக்கு respect கொடுத்து  படம்  எடுத்திருக்கிறார்கள். படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!!!



பின் குறிப்பு:-

படம் முடிந்து வரும்போது feed back கேட்டார்கள்.. இரண்டாம் பத்தியில் உள்ளதை கூறினேன்..


படம் குறித்த உரையாடல் படத்தில் சண்டைக் காட்சிகளும் பஞ்சாயத்து சீனும் இல்லாத குறையை போக்கியது

No comments:

Post a Comment