அருவி பட இயக்குநர் அருண் பி்ரபு புருஷோத்தமன் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாக உள்ள வாழ் திரைப்படத்தை ஒரு வாரம் முன்பே கண்டுவிட்டேன். அவருடைய முதல் படம் போலவே அதுவும் மற்றொரு புதிய கதைக்களம் என்று சொல்லலாம். அதைவிட இதில் நகைச்சுவை தருணங்கள் அதிகம். அதனால் இன்னும் சுவாரசியமாகவே இருக்கிறது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இந்த புதிய களத்தை அணுக அவர் புதிய உலகம் எதையும் காட்டாமல் இயல்பான வாழ்க்கையிலிருந்தே கொண்டு செல்கிறார். கதாநாயகனோடு இயல்பாக பொருத்திக் கொள்ள முடிகிறது. எதிர்நீச்சல் திரைப்படத்தில் வரும் சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான ரோல். அதில் அறிமுக நாயகன் பிரதீப் ஆண்டனி நன்றாக நடித்திருக்கிறார். கதாநாயகியான இரு பெண்கள். அதில் TJ பானு சிறந்த பர்ஃபார்மன்ஸ்.
எதையும் யோசித்து யோசித்து செய்து தயங்கி அதில் சொதப்பும் நாயகன், எதையும் செய்ய தயங்காத ஒரு ஹைப்பர் ஆக்டிவ் சிறுவன் இருவரையும் இணைக்கும் இரு பெண்கள் என கதை நகர்கிறது. அதில் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் நுணுக்கமான நகைச்சுவை. காதல் என நிகழும் அபத்தங்கள் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன. காதலுக்கு போராடும் தங்கை கொட்டும் மழையில் நனைந்து போராடும் வைராக்ய காட்சிகள் உதாரணம்.
சிவகார்த்திகேயன் படங்கள் அனைவருக்கும் பொதுவான படங்களாக வருபவை. குறிப்பாக குடும்பமாக பார்க்க தகுந்தவை...இந்த படமும் அந்த வகையில் வரும். தியேட்டரில் வந்தால் கண்டிப்பாக வெற்றியடைந்திருக்கும். வரும் 16ம் தேதி OTT யில் வருகிறது.
ஒரு நாவலுக்கு நீண்ட விமர்சனம் எழுதலாம். ஆனால் திரைப்படங்களுக்கு சொல்லும் விமர்சனம் என்பது ஒரு வரி கருத்துதான். வேறலெவல், ஒன் டைம் வாட்ச், வேஸ்ட் ப்ரோ என்றுதான் திரையரங்கு விட்டு வெளியே வருபவர்கள் கூறுகிறார்கள். அந்த மூன்று விரல்களில் ஒன்றைத்தான் தொடவேண்டும் என்றால் வேறலெவல் என்கிற விரலை தாராளமாக தொடலாம்
No comments:
Post a Comment