Tuesday, February 24, 2009

எற்றோமற் றெற்றோ மற்றற்று..

காணி நிலம் வேண்டும் - பராசக்தி 
காணி நிலம் வேண்டும், - அங்கு 
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள் 
துய்ய நிறத்தினதாய் - அந்தக் 
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை 
கட்டித் தரவேண்டும் - அங்கு 
கேணியருகினிலே - தென்னைமரம் 
கீற்று மிளநீரும். 

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் 
பக்கத்திலே வேணும் - நல்ல 
முத்துச் சுடர்போலே - நிலாவொளி 
முன்பு வரவேணும், அங்கு 
கத்துங் குயிலோசை - சற்றே வந்து 
காதிற் படவேணும், - என்றன் 
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் 
தென்றல் வரவேணும்.
 


பாரதி இன்னைக்குஇந்த பாடலை பாடினால் அவனை ஒரு பேராசைக்காரன் என்று முத்திரை குத்திடுவேன். பரவாயில்லை....அவன் பகல் கனவு காண்றவன் தானே என்று மன்னிச்சும் விடுவேன்...அது என் அப்போதைய மனநிலையை பொருத்து இருக்கும்.

இன்றைக்கு பாரதியின் ஆசையை நான் நிறைவேற்றிக்கொள்ள நினைச்சா 1 கோடி தேவைப்படும். இந்த கோடி,  நிலத்தை வாங்கி தென்னை நட்டாலே சரியாப்பூடுமே......மாளிகை கட்டணும்னா இன்னொரு கோடி அட்லீஸ்ட் 70 லட்சம் ( டபுள் பெட்ரூம் ட்யூப்லெக்ஸ் போதும்).

இந்த 2 கோடியும் நான் யாருக்கு த்ரணும்? நா...ப்பது பர்செண்ட் நாட்டுக்கு...வெறும் அறுவது புரோக்கருக்காம்...அதுவும் காசா தரணும்...காசோலை நாட் அக்செப்டெட். அந்த காசை அவர் என்ன பண்ணுவாரு? அவரும் காசாத்தானே செலவழிக்கணும்..யானைக்கு அல்வா வாங்கியது பூனைக்கு ஹக்கீஸ் வாங்கியது என செலவாகும். புரியலையா? பணப்புழக்கம்பா...இப்படியே சென்னையில் மட்டும் புழங்கிய பணம் எவ்வளவு இருக்கும் என சென்னையில் இருக்கும் வீடுகளை பார்த்து கணக்கு போட்டால்...ஆஹா.....கோடானு கோடி அதில் குளிப்போம் விளையாடி....

குழந்தை வளர்ந்து பெரிசானதும் வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்கணும்...நல்லா கல்யானம் பண்ணணும்...கவலையே இல்லை...ஒரு ப்ளாட்டை வாங்கி போட்டாச்சு...இப்போ 3 லட்சம் 20 வருஷம் கழிச்சு...அப்படியே 20 இல்லை 30 டைம்ஸ்...

அரசாங்கத்துக் இது தெரியாதா? 

அது எப்படி தெரியும்...??கண் முன்னாடியே கண்ணுல மண்னை தூவிட்டே பக்கத்து மாநிலங்களுக்கெல்லாம் லாரியிலே அள்ளிட்ட்டு போறாங்க...அதுவே தெரியல . இது எப்படி தெரியும்...

அட...அந்த மக்களோட கஷ்டம் தெரியாம பேசறீயே கோவாலு...அவிங்க் ஊர்ல ஆறு வத்தவே வத்தாது அப்புறம் எப்படி மண்ணு அள்ளறது? இங்கேதான் ஆத்துல தண்ணி ஓடலையே ..லாரியும் டிராக்டரும் மாட்டு வண்டியும் ஓடுது... 

அது சரி... அப்புறம் மண்னு இல்லாம எப்படி வூடு கட்டறது ....சாப்ட் பார்க்கும்...மல்டிப்லெக்ஸும் கட்டுறது...? 
 
எற்றோமற் றெற்றோ மற்றற்று...

என்னப்பா சொல்றே...

என்ன செய்வது...என்ன செய்வது...என்ன செய்வது -ன்னு அர்த்தம்...

யாரு சொன்னா...சும்மா உளறாதப்பா...

வெண்பாவிரு காலிற் கல்லானை வெள்ளோலை
காண்பார்க்க கையா லெழுதானை பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்க பெற்றாளே
எற்றோமற் றெற்றொ மற்றெற்று..

இது ஓளவையார் பாட்டுன்னு காத்துவழி சேதி ஒண்ணு ....

பாட்டுல இருக்குற சப்ஜெக்ட் வேற...கடைசி வரி மட்டும் எல்லாத்துக்கும் பொருந்தும்...




2 comments:

காளி said...

இதே பாடலுக்கு திருய் நாஞ்சில்நாடன் அவர்கள் விகடனில்(11-03-2009 )கீழ்கண்ட விளக்க்ம் கொடுத்துள்ளார்..
இருமுறை எடுத்துச் சொன்னபோதும் வெண்பாவின் பொருள் தெரியாமல் நின்றவனை, தெளிவான ஓலையில் கண்ணால் பார்த்துச் செய்தியைத் தன் கையால் எழுத அறியாதவனை, பிறர் நகைக்கப் பெண்பாவி பெற்றாளே, பேயே! அவளைப் போய் எற்றோ எற்றென்று எற்று.

நான் படித்த புத்தகத்திலும் இது பேயிடம் சொலவது போண்ர கதையாகத்தான் இருந்தது...ஆனால் எற்று என்பதற்கு இவர் வேறு அர்த்தம் கொடுத்துள்ளார்...

முத்து said...

ஒரு அரச குமாரி வேறு ஒரு இளவரசனை இரவு மண்டபத்துக்கு வருமாறு எழுதி அனுப்புகிறாள் அதை படிக்க தெரியாத அரசன் வேறு ஒருவரிடம் காட்ட அவன் தந்திரமாக மண்டபம் பக்கம் போனால் அரசன் தலையை வெட்டுவான் என்று சொல்லி அவன் அரசன் போல் சென்று இளவரசியுடன் கூடி பிறகு உண்மை தெரிய இளவரசி தற்கொலை செய்து பேயாக மாறி அந்த மண்டபத்துக்குள் இருக்க
அங்கு வந்த ஔவை பாட்டியை துன்புறுத்துகிறார் அப்போது ஔவை
படிக்க தெரியாதவர், நிலம் மற்றும் மழை இருந்தும் உழைக்காமல் இருப்பவன்,
அழகான பெண் இருந்தும் உறவு கொள்ளாமல் துறவு கொள்பவர் இவர்களை" எற்று எற்றென்று எற்று "
நான் புரிந்து கொண்டது நண்பர் சொல்கிறார் அவர்கள் மீது பேயை ஏறிக்கொள்ள சொல்கிறார் ஔவைப்பாட்டி.